நவீன கணனிகளைத் திருடி நண்பிகளின் லீலைகளை பதிந்த மாணவர்கள் கைது : இலங்கையில் அதிர்ச்சி

ஹொரனவில் உள்ள முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பெரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர். பல கடைகளுக்குள் நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருடப்பட்ட கணினிக்குள் அவர்கள் பதிவு செய்த ஏராளமான ஆபாச வீடியோக்களை பொலிசார் கண்டுபிடித்தனர். 16 வயது நிரம்பிய மாணவர்களை அங்கருவதோட்ட பொலிசார் கைது செய்தனர். தோம்பகொட, படகொட பகுதிகளை சேர்ந்த மாணவர்களே கைதாகினர். எட்டு கடைகளை உடைத்து ரூ. 4 மில்லியன் மதிப்புள்ள மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களை இவர்கள் திருடியுள்ளனர். மூன்று மாணவர்களும் வியாழக்கிழமை இரவு (15) கோடரியுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவ்கள் வெளிப்பிட்டன. மாணவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்கள், திருடப்பட்ட மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களை பொலிசார் மீட்டனர். திருடப்பட்ட கணினிக்குள் பல ஆபாச வீடியோக்களை பொலிசார் அடையாளம் கண்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களின் நண்பிகளான மாணவிகளின் சில நிர்வாண வீடியோக்களும் கணினியில் இருந்தன.

அங்குருவதோட்ட, ஹொரன, இங்கிரிய மற்றும் புலத்சின்ஹல பகுதிகளில் பல கடைகளுக்குள் புகுந்து மாணவர்கள் பொருட்களை திருடியதாக பொலிசார் தெரிவித்தனர். இருப்பினும், 24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் எட்டு திருட்டு வழக்குகளை மட்டுமே பொலிஸாரால் வெளிப்படுத்த முடிந்தது. ஹொரன நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

Contact Us