செல்பி எடுத்ததால் பரிதாபமாக பலியான 3 சிறுமிகள்!

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதேவ் தால் குளத்தில் நேற்று முன்தினம் 7 சிறுமிகள் படகு சவாரி சென்றனர். அவர்கள் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். படகு சவாரியின்போது சிறுமிகள் செல்போனில் செல்பி எடுக்க முயன்றதில் படகு கவிழ்ந்து, அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.

அவர்களில் 4 சிறுமிகள் ஒருவழியாக நீந்திக் கரையேறிவிட்டனர். படகோட்டியும் நீந்தி தப்பித்துவிட்டார். ஆனால் 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.

கரையேறிய சிறுமிகளில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Contact Us