பிரான்சில் இடம்பெற்ற பெரும் பயங்கரம்: மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் பலர் சாவு!

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் பகாஜா என்ற நகரில் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மின்கோபுரம் திடீரென சரிந்து விழுந்தது.‌ இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.

இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மின் கோபுரம் சரிந்து விழுந்தது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Contact Us