சிறுமி கொலை? ரிஷாட் தரப்பில் பல மில்லியன் ரூபாய் வாங்கிய மலையக எம்.பி!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) உயிரிழந்துள்ளார்.

இந்த பிரச்சினை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.,

இதனையடுத்து இப்பிரச்சினை முடிவிற்கு கொண்டுவர ரிஷாட் தரப்பில் இருந்து பல லட்ஷம் ரூபாய் பேரம் பேசல் இடம்பெற்று வருகின்றது, அந்த வகையில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட் தரப்பினர் இருபது லட்ஷம் தருகிறோம் இப்பிரச்சினையை விட்டு விடுங்கள் என பேரம்பேசியுள்ளனர்.

தொடர்ந்து மலையக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும், அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஏதும் இடம்பெறாமல் இருப்பதற்கு பல மில்லியன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

நன்றி – மலையகம்.lk

Contact Us