வின்சன் சர்சில் ரேஞ்சுக்கு பேச இருந்த பொறிஸ் ஜோன்சனை திட்டி தீர்த்த சுகாதார துறை- ஒரு நாளைக்கு 55,000 பேருக்கு பரவும் கொரோனா !

ஜூலை 19ம் திகதி சகல கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பிரிட்டன் அறிவிக்க உள்ள நிலையில். கடந்த 12 நாட்களாக பொறிஸ் ஜோன்சன் ஆற்றவேண்டிய உரையை, பல புத்தி ஜீவிகள் இணைந்து தயாரித்து வருகிறார்களாம். இதில் கூட கான்சர்வேட்டிவ் கட்சி அரசியல் நடத்துகிறது என்றால் பாருங்கள். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளையில், பிரித்தானியா மீது ஹிட்லரின் படைகள் மூர்கமாக தாகியது. ஆனால் ஒரு போதும் அடி பணியமாட்டேன் என்று, இரும்பு மனிதராக இருந்தவர்  அப்போதைய பிரதமர் வின்சன் சர்சில். இறுதியாக போரை வென்றபின்னர், அவர் பிரித்தானிய மக்களுக்கு ஆற்றிய உரை மிக முக்கியமானதொன்றாகும். அந்த காலத்தில் அது மிக மிக புகழ்பெற்ற உரையாக இருந்தது. அந்த ரேஞ்சில் ஒரு உரையை தயார் செய்யுமாறு பொறிஸ் ஜோன்சன் பணித்திருந்தாராம்.. ஆனால் பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 55,000 பேருக்கு கொரோனா தொற்று…

ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும். 750 பேருக்கு மேலாக ஒரு நாளைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ள சுகாதார துறை. பிரித்தானியாவில் 63% சத விகிதத்தால் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், சுதந்திர தின உரை முக்கியமா ? என்று கேட்டுள்ளது. இதனை அடுத்து மூக்குடைபட்ட பொறிஸ் ஜோன்சன் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளாராம். ஒரு சைக்கிள் கேப் கிடைத்தால் போதும். உடனே அதனை பாவித்து தனது செல்வாக்கை உயர்த்தவே அரசியல்வாதிகள் முனைகிறார்கள். இதில் கொரோனாவை சாட்டி, அரசியல் வேறு செய்கிறார்கள் என்பது தான் பெரும் வெக்கக் கேடான விடையமாக உள்ளது.

இந்த நிலை நீடித்தால் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேருக்கு கொரோனா பரவும் நிலை இன்னும் சில வாரங்களில் ஏற்படும். 2 தடுப்பூசிகள் எடுத்த பல ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதும், பிரித்தானிய சுகாதார துறை அமைச்சருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதும், பிரித்தானிய மக்களை உலுக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Contact Us