யார’ வரைஞ்சுருக்கார்னு தெரியுதா…? ‘3,000 முத்தத்தில் அசாத்தியமான சாதனை…’ வேற லெவல் பிரதர் நீங்க…! – பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்…!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரது மகன் நரசிம்மன் (20). இவர் கோயம்பத்தூரில் உள்ள ரங்கநாதன் ஆர்கிடெக்சர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

tn cmo mk Stalin painted a picture of kissing on the screen

இவர் சிறுவனாக இருக்கும்போதே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் உண்டு. இவர் பள்ளி கூடத்தில் படித்தபோதே அழகான இயற்கை காட்சிகள், பறவையினங்கள், விலங்குகளை ஓவியமாக வரைந்து பார்ப்பார்.

ஒரு பாத்திரத்தில் இருக்கும் பெயிண்டை தன்னுடைய உதடுகளினால் தொட்டு திரையில் முத்தமிட்டு முதல்வரின் ஓவியத்தை உருவாக்கியுள்ளார். ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து முடிப்பதற்கு இவர் தனது உதடுகளால் மொத்தம் 3000 முறை திரையில் முத்தமிட்டு ஓவியத்தை பட்டை தீட்டியுள்ளார்.

இந்த ஓவியத்தை வரைவதற்கு கெமிக்கல் எதுவும் கலக்காத ‘பிக் அப்’ பெயிண்ட் என்ற பெயின்ட் வகையை உபயோகப்படுத்தியுள்ளார். இந்த ஓவியத்தை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார் நரசிம்மன்.

tn cmo mk Stalin painted a picture of kissing on the screen

இவர் இதற்கு முன்பு தஞ்சை பெரிய கோயில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஓவியங்களை தனது மூக்கினால் தொட்டு வண்ணத்தில் வரைந்துள்ளார். இவருடைய அசாத்திய கலை திறமையை பாராட்டி பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.

நரசிம்மன் வரைந்த ஓவியத்தை மக்கள் வெகுவாக பாராட்டியும், இணையதளங்களில் பகிரபட்டும் வருகிறது.

Contact Us