ஆபாச படங்கள்.. மிரட்டிய போலீஸ்காரர்.. திமிறிய மனைவி..

 

சென்னை : சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், போலீஸ்காரர் மீது ஜெயபிரகாஷ் என்பவர் புகார் கொடுத்தார். எனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் கேட்டு போலீஸ்காரர் மிரட்டுகிறார். அவராலும் என் மனைவியாலும் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கதறினார்.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: ‘நான் கூரியர் சர்வீஸ் நடத்தி வருகிறேன். கடந்த 2002ம் ஆண்டு ரூபாவதி என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். என் கூரியர் அலுவலகம் முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ளது.

கடந்த ஜூன் 6ம் தேதி என் மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது நான் அவரிடம் இதுபற்றி கேட்ட போது தான் எனக்கு நடந்த விவரங்கள் தெரிந்தது. என்னிடம் அவர் கூறும் போது , ‘முத்தியால்பேட்டை காவல் நிலைய காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின், அடிக்கடி என்னை லாட்ஜுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, என்னை மிரட்டி வீட்டிலிருந்த ரூ.3 லட்சம், 3 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை மிரட்டி வாங்கினார். தொடர்ந்து பணம் தராவிட்டால், அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டுகிறார்’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். இதுபற்றி அறிந்த பெஞ்சமின் பிராங்க்ளின், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனினும் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அதை போலீசார் ஏற்க மறுத்தனர். என் மீது பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று மிரட்டினார்கள்.

அதன் பிறகு எனது மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போனை எடுத்து பார்த்த போது அதில் டிஸ்பிளே மற்றும் சிம் கார்டு உடைந்து இருந்தது அதை சரி செய்து பார்த்தபோது, எனது மனைவி அடிக்கடி காவலர் பெஞ்சமின் பிராங்கிளினிடம் பேசியதை கண்டுபிடித்தேன். வாட்ஸ்அப்பில் உள்ள புகைப்படங்களை பேக்கப் செய்து பார்த்தபோது காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின், என் மனைவி ரூபாவதி ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் இருந்தது.

இதுபற்றி கடந்த ஜூலை 13ம் தேதி மனைவியிடம் விசாரித்தபோது, ‘நான் அவருடன் தான் இருப்பேன். அவர் ஒரு போலீஸ். அதனால் எங்கள் இருவரையும் உன்னால் ஒன்றும் பண்ண முடியாது, என்று மிரட்டினார். விரைவில் நானும், பெஞ்சமின் பிராங்க்ளினும் சேர்ந்து உன்னை கொன்று விடுவோம், என்று மிரட்டினோம். இதனிடையே, கடந்த 14ம் தேதி பெஞ்சமின் பிராங்க்ளின் என்னை தொடர்புகொண்டு, உனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை உனது உறவினர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பரப்பி விடுவேன். அவ்வாறு செய்யாமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டினார்.

பணம் தரமுடியாது என்று நான் தெரிவித்தேன். பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் எனது மனைவி ரூபாவதியால் என் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனவே காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் என்னுடைய மனைவி ரூபாவதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியிருந்தார்.

Contact Us