ஐசாய் உருக வைக்கும் ஐஸ்வர்யா தத்தா க்யூட் ஃபோட்டோஸ்

நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படம் சிறந்த அறிமுக நடிகைகளில் ஒருவர் என்ற பெயரை ஐஸ்வர்யாவுக்கு பெற்றுத் தந்தது. தைத் தொடர்ந்து விஷால் நடித்த பாயும் புலி படத்தில் காஜல் அகர்வாலுக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு விதார்த் மற்றும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்க இரண்டு படங்களில் ஐஸ்வர்யா ஒப்பந்தம் ஆனார். ஆனால் பிறகு இந்த இரண்டு படங்களுமே கைவிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா தத்தா.

 அதன் பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாததால் 2018 ல் விஜய் டிவி.,யில் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இது ஐஸ்வர்யாவிற்கு நிறைய ரசிகர்களை பெற்றுத் தந்தது. தற்போது கொட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புக்களுடன் வெப் சீரிஸ் சிலவற்றிலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். இதற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து, அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றத்தை மாற்றி உள்ளார். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Contact Us