உள்ளாடையில் இருந்து, மேலாடை வரை..! பிரபலத்தின் பழைய துணிகளை வாங்கிக்குவிக்கும் ரசிகர்கள்.!!

பிரபல இன்ஸ்டா மாடல் பயன்படுத்திய உடைகளை ரசிகர்கள் வாங்கி குவித்து வருவதால், வருமானத்தில் கொடிகட்டி பறந்து வரும் நிகழ்வு நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சார்ந்த நடிகை மற்றும் இன்ஸ்டா மாடல் அழகி மார்செலா அலோன்சோ (Marcela Alonso) வயது 41. இவர் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பிரபல மாடல் அழகியாகவும், கவர்ச்சி நடிகையாகவும் இருந்து வருகிறார். கவர்ச்சியான ஆடைகள் அணிந்து உடல் அங்கங்களை காட்டுவது என தொடர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு பாலோவர்களை பெற்றவர். இந்நிலையில், இவர் தனக்கென பிரத்தியேக இணையப்பக்கத்தை உருவாக்கி, அதன் வாயிலாக ரசிகர்களிடம் உரையாடுவது, ரசிகர்களுக்கு கவர்ச்சியை நேரலையில் காண்பிப்பது என பிசியாக இருப்பவர்.

இவரது ரசிகர்கள் பல நாட்களாக அவர் பயன்படுத்திய உடைகளை விற்பனைக்கு கேட்டு அடம்பிடித்து வந்துள்ளனர். இதனையடுத்து, ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுந்த தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து, அதனை நிறைவேற்றும் பொருட்டு தான் புகைப்படத்திற்காக பயன்படுத்தும் ஆடைகளை விலை பட்டியலிட்டு விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இவரது பின்தொடர்பாளர்கள் பலரும் அதனை இணையம் வாயிலாக முன்பதிவு செய்து வாங்கி வருகின்றனர். இதன் மூலமாக, மார்செலா அலோன்சோ வருடத்திற்கு சுமார் 1 இலட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 74,91,255) பழைய துணிகளை விற்பனை செய்து சம்பாரித்து வருகிறார். மேலும், அவர் உடையணிந்து புகைப்படம் பதிவு செய்ததும், அந்த உடை விற்பனையாகிவிடுகிறது. அவர் முதலில் பயன்படுத்திய உடையில் இருந்து, தற்போது பயன்படுத்தும் உடை வரை ரசிகர்கள் வாங்கி வருகின்றனர். உள்ளாடை உட்பட என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,

எனது பழைய விளையாட்டு பிராவை 240 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.17,979) வாங்கியுள்ளார். கிணிக்கர்களை (காலடி முழங்கால் ஆடை Knickers) 120 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,989) கொடுத்து வாங்குகின்றனர். எனது ஆடையை வாங்கியதும் அவர்கள் கையால் பிடித்து பார்க்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். எனது அண்டை வீட்டு ரசிகர் அவ்வப்போது என்னை அவர் வாங்கிக்கொடுத்த எளிமையான செருப்பை அணிய வைத்து நடக்க சொல்லி மகிழ்வார் ” என்று தெரிவிக்கிறார். பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Contact Us