அமெரிக்கா வீதியால் குழந்தையைக் கடத்த முற்பட்ட இளைஞன்….போராடி காப்பாற்றிய தாய்! -வீடியோ-

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், தாயுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தையை, இளைஞர் காரில் கடத்த முயன்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. Dolores Diaz என்ற அந்த பெண் தமது 3 குழந்தைகளுடன் நடந்து சென்றபோது, அருகே காரில் இருந்து இறங்கிய James McGonagle என்ற 24 வயது இளைஞர், திடீரென 5 வயது குழந்தையை தூக்கிச் சென்று, காரின் பின்இருக்கையில் திணித்தார்.  இதனால் Dolores Diaz அதிர்ச்சியடைந்தபோதும் உடனே ஓடிச்சென்று, முன்பக்க கதவு கண்ணாடி வழியாக, குழந்தையை வெளியே இழுத்து காப்பாற்றினார்.

எனினும், காரில் தப்பிய இளைஞரை, சிசிடிவி காமிராவில் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

Contact Us