“மாம்பழ இராஜதந்திரம்”; இலங்கையை ஆட்டையை போட்ட வெளிநாடொன்றிலிருந்து மகிந்தவுக்கு மாம்பழங்கள்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டு அழகிய மாம்பழங்களை தனது பரிசாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் இந்த மாம்பழங்களை பிரதமர் மகிந்தவிடம் ஒப்படைத்தார்.

இந்த பரிசுக்கு பங்களாதேஷ் பிரதமருக்கு, பிரதமர் மகிந்த தனது மனமார்ந்த நன்றியைதெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழங்களை அனுப்பினார். அத்துடன் இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியாவில் உள்ள பல மாநில முதலமைச்சர்களுக்கும் மாம்பழங்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us