கூட்டமாக வெளியேற்றப்படும் மக்கள்… காட்டுத்தீயால் தொடரும் சோகம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மொத்தமாக 300 இடங்களில் காட்டுத்தீ இன்னமும் பற்றியெரிந்து வருவதாக தகவல் வெளியாகிய்யுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். தாம்சன்-நிக்கோலா பிராந்திய மாவட்ட நிர்வாகம் மொத்தம் 785 பேர்களை தங்கள் உடைமைகளை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

Tremont Creek காட்டுத்தீயானது தற்போது 5,000 ஹெக்டேர் நிலப்பரப்பை வியாபித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வலுவான காற்றுடன் வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகள் தீயணைப்பு வீரர்களை இரவு முழுவதும் விழிப்புடன் செயல்பட வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 20 பகுதிகளில் இருந்து வெளியேற்ற உத்தரவுகளும், மேலும் 51 பகுதிகளில் வெளியேற தயாராக இருக்க எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

Contact Us