கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிய இங்கிலாந்து

 

 

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் எச்சரிக்கையை மீறி, இங்கிலாந்து அரசு இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி உள்ளது. முக கவசம், சமூக இடைவெளி, வீட்டில் இருந்தே வேலை ஆகிய கட்டுப்படுகள் நீக்கப்பட்டு, இரவு நேர கேளிக்கை விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருக்கு கொரோனா ஏற்பட்டதால், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், இப்போது கட்டுப்பாடுகளை விலக்காமல், வரும் குளிர்காலத்தில் விலக்கினால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து விடும் என செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்தில் 3 ல் இரண்டு பங்கு மக்கள் தொகையினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே தொற்று அதிகரித்தாலும் அதை சமாளித்து விடலாம் என கருதி, பிரதமர், கட்டுப்பாடுகளை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

Contact Us