எச்.ராஜாவுக்கு புதிய நெருக்கடி!.. கைவிரித்த உயர்நீதிமன்றம்!.. 2 ஆண்டுகளுக்கு பின் சூடுபிடிக்கும் விசாரணை!

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

bjp h raja anticipatory bail plea rejected by high court

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018ம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமா்சித்துப் பேசியதாக எச். ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி அவா் மன்னிப்பு கோரினாா்.

இந்நிலையில், அவா் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாஜக நிர்வாகி எச். ராஜா, “நான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன். ஆனால், திருமயம் நீதித்துறை நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனா். என் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

அதைத் தொடர்ந்து, இந்த மனு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக எச்.ராஜாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Contact Us