சிம்பிளா ‘கல்யாணம்’ பண்ணலாம்.. அதுக்குன்னு இவ்ளோ சிம்பிளாவா.. கல்யாண ‘செலவு’ எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் திருமண செலவுக்கு ஆன தொகை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Couple spend just Rs 500 for wedding goes viral

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மக்கள் கூட்டமாக கூடும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக பலரும் தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தி வருகின்றனர்.

Couple spend just Rs 500 for wedding goes viral

Couple spend just Rs 500 for wedding goes viral

இதனால் திருமணத்தை எளிமையாக நடத்த இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நீதிமன்றத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளார். இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த திருமணத்துக்கு ஆன செலவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவு திருமணத்துக்காக ரூ.500 மட்டுமே அவர்கள் கட்டணமாக செலுத்தியுள்ளனர். எளிமையாக திருமணம் செய்யலாம், அதற்காக இவ்வளவு எளியான என நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். மேலும், மணமகனான மேஜர் சிவாங்கி ஜோசி, பெண் வீட்டாரிடம் இருந்து எந்தவித வரதட்சணையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us