போட்டியாளர்கள் நெருக்கமாவதை தடுக்க… ‘புதியவகை கட்டில்களை அமைத்து’… ‘ஷாக் கொடுத்த ஒலிம்பிக் நிர்வாகம்’!

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஒலிம்பிக் போட்டி நிர்வாகக் குழு பகீர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

anti sex beds at tokyo olympics for athletes pictures go viral

ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜுலை 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கடந்த 2020ம் ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. ஆனால், ஒலிம்பிக் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் மற்ற வீரர்களிடையே பீதி நிலவுகிறது.

இதற்கிடையே, ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு ஆணுறை வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அதாவது, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் காண்டம் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும், இது போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகவே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருக்கும் கட்டில்கள் அட்டைப்பெட்டிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அமெரிக்க வீரர் ஒருவர், இந்த கட்டில்களின் புகைப்படங்களை பகிர்ந்த பிறகு, ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களின் இத்தகைய செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க வீரர் பால் செலிமோ இந்த படுக்கையின் படங்களை பகிர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் நிறுவப்படவுள்ள படுக்கைகள் அட்டைப் பெட்டியால் செய்யப்பட்டுள்ளன. இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

எனினும், போட்டி முடிந்த பிறகு, டோக்கியோவில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் கிளம்பும் போது ஆணுறை வழங்கப்படும் என்று ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டோக்கியோ 2020-ன் ஏற்பாட்டாளர்கள், நான்கு காண்டம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 160,000 காண்டம்களை வழங்குகின்றனர்.

Contact Us