லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய இராசலிங்கம் டொக்டர் உயிரிழந்தது ஏன்??

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பரவியது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது௮0) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக ஏன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது என்பது தான் தெரியவில்லை. சில பல காரணங்களுக்காக தமிழர்கள் சிலர் இலங்கை செல்ல முற்படுகிறார்கள். ஆனால் விமானத்தில் அதிகமாக கொரோனா தொற்ற வாய்ப்பு இருப்பதனை இவர்கள் நினைப்பது இல்லை.

இவர் லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.இதன்போது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.இதனால் பொலிஸ் விசாரணையினை தொடர்ந்து சடலத்தை சுகாதார நடைமுறைகளின் கீழ், மின் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Contact Us