சொகுசு விடுதியில் பார்ட்டி நடத்திய நடிகை கைது!

 

சென்னை அருகே சொகுசு விடுதி ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த கானத்தூர் என்ற பகுதியில் சொகுசு விடுதியில் நடிகை கவிதாஸ்ரீ என்பவர் இரவுபார்ட்டி நடத்தியதாக தெரிகிறது. இந்த பார்ட்டியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கொரோனா விதிமுறைகளை மீறி இந்த பார்ட்டி நடத்தப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்து பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.  உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் கொரோனா தடுப்பு விதிகளை மீறி இரவு பார்ட்டி நடத்திய சொகுசு விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகை கவிதாஸ்ரீ ஏற்பாட்டின் பேரில் 15 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் இரவு பார்ட்டியில் பங்கேற்றதாகவும் அனைவரிடமும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Contact Us