கிடைத்தது இரகசிய தகவல்…. சுற்றி வளைத்த அதிகாரிகள்

காஷ்மீர் பகுதியில் லக்க்ஷர் ஏ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான அபு அக்ரம் காவல்துறை பாதுகாப்பு படையினர்களால் கொல்லப்பட்டார். காஷ்மீரின் தெற்கே உள்ள பகுதியில் லக்க்ஷர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக காவல்துறை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவலர்கள் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் சாதிக் கான் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்பு அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் லக்க்ஷர் ஏ  தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் இந்த அமைப்பின் முக்கிய தளபதியான அபு அக்ரம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த இருவரும் காஷ்மீரில் பலவருடங்களாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு துறையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் பதுங்கி இருந்த அறைகளில் ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் சில பத்திரிகைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Contact Us