‘தல 61’ அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி… தீயாய் பரவும் தகவல்…!!!

அஜித்தின் 61-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்தில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித்- ஹெச்.வினோத்- போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தல 61- படத்தை ஹெச்.வினோத் இயக்க இருப்பதாகவும், போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Contact Us