ஒரு தடவ, ரெண்டு தடவ இல்லங்க…’ ‘வருசத்துக்கு அஞ்சு தடவ மாத்துறேன்…’ ஆனாலும் அவங்க ‘அத’ நிறுத்துற மாதிரி தெரியல…! – பிரஷாந்த் கிஷோர் வேதனை…!

ஒரு வருடத்தில் 5 செல்போன் மாற்றியும் தன்னை உளவுப்பார்க்கும் வேலை முடிக்கப்படவில்லை என தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Prashant Kishore 5 cell phones in a year about hacking

பொதுவாக உலக நாடுகள் பல தீவிரவாத தற்காப்புக்காக தங்கள் நாட்டில் உளவுபார்க்கும் மென்பொருட்களை உபயோகிக்கும். அதேப்போன்று, இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை இந்தியாவும் வாங்கியுள்ளன.

தேர்தல் உத்திகளை வகுத்துதரும் பிரசாந்த் கிஷோர்,2014-ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வேலை செய்து வந்தார். .

ஆனால், இப்போது பாஜக எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் உத்தி வகுத்துக் கொடுத்துவருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது செல்போனை ஹேக் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறியுள்ளார். வருடத்திற்கு ஐந்து முறை செல்போனை மாற்றுகிறேன் என தெரிவித்துள்ளார். கடைசியாக பிரசாந்த் கிஷோருடைய செல்போன் கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று ஒட்டுகேட்கப்பட்டதாக தடயவியல் புள்ளிவிவரம் கூறுகின்றது.

Contact Us