ரிசாத் பதியுதீனின் மனைவி தொடர்பில் நீதவான் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி ரிசாத் பதியுதீனின் மனைவி, அவரின் மாமா மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய நேற்று (19) உத்தரவிட்டார்.

உயிரிழந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காலத்தை கண்டுபிடிக்க பொரளை பொலிஸார் ஒரு கடிதத்தின் மூலம் கோரியதை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், இந்த சிறுமியை அழைத்து வந்த நபரின் வங்கி கணக்கு பதிவுகளை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தொடர்புடைய வங்கிகளுக்கும் நீதவான் உத்தரவிட்டார்.

Contact Us