குடும்ப மானமே போச்சே..? குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரைவிட்ட தாய்!

கிருஷ்ணகிரி அருகே மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட சமயத்தில் மகள் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியால் தாய் தனது குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி 13 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த  மிண்டிகிரி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (51) இவர் பெங்களூரில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அம்சவேணி (45) என்ற மனைவியும் பிரியா (19), திரிஷா (17) என்ற இரண்டு  மகள்களும்,விஷ்ணு (13) என்ற ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் மகாலிங்கம் தனது மூத்த மகள் பிரியாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார்.

இதனிடையே பிரியாவும் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரியாவின் தந்தை பிரியாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரியாவும் அவரது காதலன் திருப்பதியும் அவரவர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அவர்களின் பெற்றோர் திருப்பதியையும்,பிரியாவையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இவர்கள் இரண்டு பேருக்கும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அம்சவேணி தனது மூத்த மகள் பிரியா காதலனுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததால்  குடும்ப மானம் போகிறதோ என்ற அச்சத்துடன் தாய் அம்சவேணி மனமுடைந்து வேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும் தற்கொலை செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு அம்சவேணி இளைய மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணு ஆகிய 3 பேரும் அம்சவேணியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணற்றில் குதித்துள்ளனர்.இதில் அம்சவேணி மற்றும் விஷ்ணு இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் இளைய மகள் திரிஷாவுக்கு நீச்சல் தெரிந்ததால் கிணற்றில் உள்ள கல்லை பிடித்து இரவு முழுவதும் இருந்து வந்துள்ளார்.மேலும்  காலையில் சந்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் கிணற்றின் அருகே சென்றபோது திரிஷாவின் சத்தம்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மத்தூர் போலீசார் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் உயிரிழந்த  அம்சவேணி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரின் உடல்களையும் கயிறு மூலம் கிணற்றின் வெளியே அவர்களின் உடல்களை மீட்டனர்.பின்னர் மத்தூர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனர்.

மகள் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியால் தாய் தனது குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us