சிறுவனின் தலையை துண்டித்து சாப்பிட்ட நபர்

 

பிரான்சில் 13 வயது சிறுவானின் தலையை துண்டித்து பாதி பாகங்களை சாப்பிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் Tarascon பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனின் தலையற்ற உடலாய் பொலிஸார் கண்டெடுத்தனர். அந்த உடல் சில நாட்களுக்கு முன் Marseille பகுதியில் கானாபால் போனதாக புகார் அளிக்கப்பட சிறுவனுடையதாக இருக்கும் என பொலிஸார் சந்தேகித்தனர். இந்த வழக்கின் விசாரணை 32 வயதான ஒரு மனநல கோளாறு உள்ள நபரை நோக்கி நகர்ந்த நிலையில் அந்த நபர் வசிக்கும் குடியிருப்பிற்கு பொலிஸார் சோதனை செய்ய சென்றனர்.

இதன்போது அந்த வீட்டில், ஒரு பாக்கெட்டில் சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கைகள் கிடைத்தன. எனினும் அது காணாமல் போன சிறுவன் தானா என்பது இன்னும் உறுதிசெய்யவில்லை. ஆனால், அந்த தலையில் பாதி பாகங்கள் காணவில்லை என்றும், அவற்றை அந்த சந்தேக நபர் உட்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதோடு சந்தேக நபரின் வீடு முழுக்க ஆயுதங்கள் மற்றும் பயங்கரமான பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சென்றபோது எந்த வீட்டில் யாரும் இல்லை. பின்னர், அந்த சந்தேக நபர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து பொலிஸார் அங்கு சென்றனர். அவரை பிடிக்க முயன்றபோது, சந்தேக கூரையின் மேல் ஏறி தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இதேவேளை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் தான் சிறுவனை கொலை செய்தவர் என்பதும் இன்னும் முடிவாகவில்லை என கூறப்படும் நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us