ஐடி ஊழியர்கள் ஷாக்!.. வெறும் 4 பேரை வைத்து… அமெரிக்க பெரு நிறுவனங்களை நடுங்கவைத்த சீனா!.. “மைக்ரோசாஃப்ட் நிறுவனம் HACKED”!

மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்ததாக, 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது.

china accused of cyber attack on microsoft exchange servers

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இது குறித்தான விசாரணையில், சீன அரசு உதவியுடன் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

சீன நிறுவனங்களுக்கும், அவர்களது வியாபாரத்துக்கும் உதவும் வகையில் அமெரிக்க அரசுத்துறைக்கு சொந்தமான கணினிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 சீனர்கள் இந்த ஹேக் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

Contact Us