வட்டிக்கு வாங்கிய பணத்தை தராததால் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை…

நீலகிரி மாவட்டம் நாடுகாணி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் 23வயதான இளம்பெண் இளம்பெண் ஒருவர் மூன்றாயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது.பணத்தை பலமுறை கேட்டும் அப்பெண் நீண்டகாலமாக தராமல் இருந்துள்ளார். இதனால் பணத்திற்கு பதிலாக தான் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஒப்புக்கொள்ள வேண்டும் என பாலகிருஷ்ணன் எழுதி அந்த பெண்ணிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒருநாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வரவழைத்த பாலகிருஷ்ணன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதுடன் அவர் தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பாலகிருஷ்ணன் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . அத்துடன் அவர் மீது கொலை மிரட்டல் விடுத்த வழக்கும் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Contact Us