தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்; சிக்கப்போகும் ரிஷாட் குடும்பம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகள் சிறுமியின் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த சிறுமி மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Contact Us