செமயா இருக்குல…! ‘ஜீரோ கிராவிட்டியில் விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்…’ – டிரென்டிங் ஆகும் வீடியோ…!

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் விண்வெளியில் மிதக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Amazon Jeff Bezos released a video floating in space

அனைத்து மக்களுக்கும் உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. அதையும் தாண்டி விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்டம் போட்டது. இதற்காக, பிரத்யேகமாக ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ செப்பர்ட் விண்கலம் மூலம் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு செல்லும் பயணத்தை தொடங்கினார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. ராகெட்டில் ஜெஃப் பெஸோஸ், அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற மல்டி மில்லினியர் என நான்கு பேருடன் விண்வெளி யாத்திரை தொடங்கியது.

3,600 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் சரியாக 11 நிமிடங்கள் மிதந்தது.

அப்போது, நான்கு பேருமே விண்ணில் ஜீரோ கிராவிட்டியை அனுபவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஜெஃப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஜெஃப் பெசோஸ் உருளையான ஒரு சிறிய பொருளை தூக்கி எறிகிறார். அதனை கேட்ச் பண்ணி ஆலிவர் மீண்டும் அவரை நோக்கி வீசுகிறார். இப்படியாக, 4 பேரும் தங்களது இருக்கையை விட்டு அங்கும் இங்குமாக மிதந்த படி கிராவிட்டையை உற்சாகமாக அனுபவிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகி வருகிறது.

கடந்த வாரம் எழுபது வயதான பிரிட்டனை சேர்ந்த பிரபல பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன் உருவாக்கிய விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலடிக்கின் ‘யூனிட்டி22’ என்ற இந்த விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா (34 வயது) உள்ளிட்ட மொத்தம் ஆறு போ் அந்த விண்கலத்தில் பயணம் செய்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

 

Contact Us