கள்ளக்காதலனுடன் கூலிப்படை ஏவி, மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகள்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்திற்குட்பட்ட  தட்டினா கிராமத்தைச் சேர்ந்தவர் சாலினி. இவரது கணவர் சஞ்சிவ் கடந்த 2018ம் ஆண்டு  உயிரிழந்தார்.  இதையடுத்து சாலினிக்கும் அவரது மாமனார் சத்பாலுக்கு இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.   தான் உயிரோடு இருக்கும் வரை சொத்தை தரமாட்டேன் என சத்பால் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து அவரையே கொலை செய்ய சாலினி முடிவு செய்தார்.

அதன்படி, கூலிப்படையினர் உதவியுடன் சத்பாலை அவர் கொலை செய்துள்ளார் .சாலினிக்கு விபின் என்ற காதலர் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.  சஞ்சிவ்வின் நண்பரான விபின், அவரது மறைவுக்கு பின் அடிக்கடி சஞ்சிவ் வீட்டுக்கு வந்துள்ளார். இதில், சாலினி மற்றும்  விபின் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. சத்பாலை வேவு பார்த்து கூலிப்படையினரையும் ஏற்பாடு செய்தது விபின்தான் என கூறப்படுகிறது.

இந்த கொலை தொடர்பாக , இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சாலினியின் தந்தை , அவரது சகோதரர், காதலர் உட்பட  5 பேரும் இதில் அடங்குவர். கொலையில் தொடர்புடைய  இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் மீரட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us