தன்னுடன் உறவு கொண்ட பின் பிரான்ஸ் சென்ற பழைய காதலியுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட கிளிநொச்சி ஆசிரியர்!! குடும்பமே குலைந்தது!!

கிளிநொச்சியிலுள்ள ஆசிரியர் ஒருவர் தனது பழைய காதலை மறக்க முடியாமல் திண்டாடியதால், பிரான்ஸில் புலம்பெயர் தமிழ் குடும்பமொன்றிற்குள் புயல் வீசியுள்ளது. குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரும், பளை பகுதியை சேர்ந்த பெண்ணும் சில வருடங்களின் முன்னர் திருமணம் முடித்து, பிரான்ஸில் குடியிருக்கிறார்கள். தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சில தினங்களின் முன்னர் கணவனால் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு மனைவி முறையிட்டுள்ளார். இதையடுத்து பொலிசாரால் கணவன் கைதான நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். மனைவி, நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார்.

இந்த குழப்பத்திற்கு, கிளிநொச்சியிலுள்ள ஆசிரியர் ஒருவருக்கும், பிரான்ஸிலுள்ள பெண்ணுக்குமான பேஸ்புக் உரையாடலே காரணமென தெரிய வந்துள்ளது.

இருவரும் கல்விகற்கும் காலத்தில் நெருங்கிய உறவில் இருந்த நிலையில், தற்போது இருவரும் வேறுவேறு திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார்கள். எனினும், பேஸ்புக் வழியாக இருவரும் பழைய காதலை புதுப்பித்ததையடுத்தே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மனைவியின் தொலைபேசி கணவனின் கைக்கு வந்ததையடுத்து இந்த குழப்பம் ஏற்பட்டது.

Contact Us