தும்புத்தடியால் உறுப்பில் அடித்து கொடுமைப்படுத்திய ரிஷாட் வீட்டார்- ரிஷாட் வீட்டில் நடந்த கொடுமை !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஹிஷாலினியின் தாய் R.ரஞ்ஜனி தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்போது, தனது மகளிடமிருந்து தொலைபேசியை பறித்து, ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்து பேசுவதாக, இளைஞன் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.தனது குழந்தையை அடிக்க வேண்டாம் என தான் ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிய முடியாது என தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தான் பெற்ற கடனை, மீள செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றது என அவரது தாய் R.ரஞ்ஜனி தெரிவிக்கின்றார்.

Contact Us