யாரும் இப்படி பண்ணாதீங்க’!.. இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடாமல், நபர் ஒருவர் காரை ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: Car repeatedly obstructing ambulance in National Highway

கர்நாடகா மாநிலம் கனச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், கடந்த திங்கள் கிழமை அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் தக்‌ஷின கனடா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னால் சென்ற கார் ஒன்று நீண்ட நேரமாக வழி விடாமல் சென்றுள்ளது.

VIDEO: Car repeatedly obstructing ambulance in National Highway

 இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்ந்து சைரன் ஒலியை எழுப்பிக் கொண்டே வந்துள்ளார். ஆனால் இது எதற்கும் செவி சாய்க்காத அந்த கார் டிரைவர், ஆம்புலன்ஸ் முன் குறுக்கும் நெடுக்குமாக சென்றுகொண்டே இருந்துள்ளார். இதனை ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

VIDEO: Car repeatedly obstructing ambulance in National Highway

இந்த வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்த நிலையில், வீடியோவில் பதிவான கார் எண்ணைக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பெயர் சரன் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் அனிமேஷன் நிபுணராக பணிபுரிந்து வருவதும் தெரிவந்துள்ளது. இதனை அடுத்து அவரது காரை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசரமாக வரும்போது, முன்னால் செல்வோர் வழிவிட்டு, உயிரை காப்பற்ற உதவ வேண்டும் என மங்களூரு போலீஸ் கமிஷனர் என சஷி குமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Contact Us