நானும் பிராமணன் தான்!”.. சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா!.. ‘ஏன் அப்படி சொன்னார்’?.. கொதிக்கும் ரசிகர்கள்!

கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

suresh rain called i am also a brahmin comment during tnpl game

தமிழகத்தில் ஐபிஎல்-க்கு அடுத்து அதிகமாக கொண்டாடப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க போட்டியில், சேலம் மற்றும் கோவை அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த முதல் போட்டியில் இருந்து தான் பிரச்சினை கிளம்பியுள்ளது.

 

இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, “நானும் பிராமணன்தான். சென்னையில் கடந்த 2004ல் இருந்து விளையாடி வருகிறேன். இந்த கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. எனது சக அணி வீரர்களை நேசிக்கிறேன். ஸ்ரீகாந்த், பத்ரி, எல். பாலாஜி ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன். இங்கிருந்து கற்பதற்கு சில விஷயங்கள் உள்ளன. சென்னை கலாச்சாரத்தை விரும்புகிறேன் எனக் கூறினார்.

இந்நிலையில், அவர் பிராமணியம் தான் சென்னை கலாச்சாரம் என்பது போல, “நானும் பிராமணன் தான்” எனக்கூறியிருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா எப்படி தன்னை ஒரு பிராமணன் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசலாம் என தமிழ்நாட்டு நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

 

Contact Us