கோவிஷீல்டு போட்டவங்களுக்கு ‘ஆயுள்’ முழுக்க ‘சந்தோசப்படுற’ மாதிரி ஒரு நற்செய்தி…! – புதிய ‘ஆய்வு’ முடிவில் வெளியாகியுள்ள ‘சூப்பர்’ தகவல்…!

சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் கொரோனாவுக்கு எதிரான செயல் திறன் குறித்து புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

Covshield vaccine can protect against corona for a lifetime

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்து உள்ளதால் இந்திய மக்கள், வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார்கள். இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும் இந்த தடுப்பூசிகளுக்கு இடையில் பனிரெண்டு வாரங்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

Covshield vaccine can protect against corona for a lifetime

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தான் அதிகமாக போடப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசியின் செயல்திறன்களை குறித்தும் பல தகவல்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து வந்துள்ள ஆய்வின் முடிவு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Covshield vaccine can protect against corona for a lifetime

இந்த தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து தற்போது இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பணுக்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.

Contact Us