மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்; பெரும் ஆபத்தா?

சூரிய குடும்ப உருவான பின்பு சிதைவுகள் சிறுகோள்கள் எனப்படுகின்றன. லட்சக்கணக்கான சிறுகோள்கள் அப்படி உருவாகி விண்வெளியில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் ‘2008 கோ20’ என்ற சிறுகோள் தற்போது பூமிக்கு அருகில் உள்ளது. மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோளானது மூன்று தாஜ்மஹால் அளவு இருப்பதாக நாசா மதிப்பிட்டுள்ளது.

அதிவேகத்தில் இந்த கோள் பயணிப்பதால் அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் உடைத்து எரிந்து விடும் என்று கூறப்படுகிறது. பூமிக்கு அருகிலுள்ள பொருட்கள் பற்றிய நாசாவின் தகவலின்படி, இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறக்கிறது.

அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். அதனால் இந்த சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகரும் என்று நாசா கணித்துள்ளது. பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும் நாசா தொடர்ந்து சிறுகோளை உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது.

Contact Us