யாழில் பிறந்து 5 நாளான தனது குழந்தையை தனக்கு திருமணம் நடைபெறது என மறைத்த இளம் பெண்!!

இச்சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவில் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, கரணவாய் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 5 நாட்களின் முன் பிரசவித்த குழந்தையை, தனது சகோதரியிடம் கொடுத்தனுப்பியிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிரசவித்த பெண், அங்கிருந்து வெளியேறியதும், குடும்பநல உத்தியோகத்தர் அந்த பெண்ணை பார்வையிட சென்றார். எனினும், குழந்தை வீட்டில் இருக்கவில்லை. பிசவித்து 5 நாட்களாக, குழந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த குடும்பநல மாது, நெல்லியடி பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

இதையடுத்து, விரைந்து செயற்பட்ட நெல்லியடி பொலிஸார், 30 வயதான அந்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளையை பிரசவித்துள்ளார். தற்போது, கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கட்டிட வேலைக்கு வந்த அறிமுகமற்ற ஒருவரின் மூலம் ஏற்பட்ட கர்ப்பத்தினால் பிரசவித்த குழந்தையை, யாழ்ப்பாணத்திலுள்ள தனது சகோதரியிடம் கொடுத்தனுப்பியதாகவும், தன்னை ஒருவர் திருமணம் செய்ய விரும்புவதாகவும், குழந்தையுடன் இருந்தால் அவர் திருமணம் செய்ய மாட்டார் என்பதால், சகோதரியிடம் குழந்தையை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் சகோதரி குழந்தைவுடன் பொலிஸ் நிலையம் வந்தார். பிரசவித்த பெண்ணிடமே குழந்தையை ஒப்படைத்த பொலிஸார், அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்

Contact Us