கோத்தா அரசிற்கெதிராக முற்றுகைக்கு தயாராகும் கொழும்பு!! நடக்கப்போவது என்ன?

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

இணையவழி கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கோரியும், சம்பள அதிகரிப்புக் கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த ஒரு வாரமாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளனர்.

இருப்பினும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இத்தகைய சூழலில் நாளை இடம்பெறவுள்ள போராட்டம் இவர்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Contact Us