சீனாவிலிருந்து இலங்கை சென்றது இரு விசேட விமானங்கள்; காரணம் என்ன?

சீனாவிடமிருந்து மேலும், 20 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த தடுப்பூசிகளுடன் சீனாவிலிருந்து புறப்பட்ட இரு விசேட விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

அந்த வகையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சினோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளில், குருணாகல் மாவட்டத்துக்கு 4 இலட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 275,000 தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இலட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

Contact Us