இம்முறை முதற் தடவையாக யாழ்ப்பாணம் செல்லும் மஹிந்த ராஜபக்ஸ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், முதல் தடவையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஜுலை மாதம் 31ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் இந்த விஜயத்தின்போது, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்று கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. அதேபோன்று, சில பொருளாதார அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில், யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் விஜயம் மேற்கொள்கின்றமையானது, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகின்றது.

Contact Us