புலம்பெயர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. கனடா வெளியிட்ட அறிவிப்பு..!!

 

கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் சுமார் 40 ஆயிரம் நபர்கள் அவர்களது பெற்றோரையும் தாத்தா பாட்டிகளையும் நாட்டிற்கு வரவழைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.கனடாவில் இதற்கு முன்பு வரை இல்லாத அளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடந்தோறும், சுமார் 10,000 நபர்கள் அவர்களது பெற்றோரையும், தாத்தா பாட்டிகளையும் கனடா நாட்டிற்கு வரவழைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதன் முதலில் 30,000 விண்ணப்பங்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கனடா நாட்டில், இந்திய நாட்டை சேர்ந்த கனடா மக்கள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் இத்திட்டத்தினால் அதிகமாக பயன் பெறுகிறார்கள். இதற்காக வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியிலிருந்து 14 நாட்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்களது பெற்றோரையும் தாத்தா பாட்டிகளையும் கனடா நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Contact Us