வவுனியாவில் மனித உரிமைகள் பெயரில் யுவதிகளின் திருவிளையாடல் அம்பலம் இவர்கள் தான் பாருங்கள் !

வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்களால் பணம் பெற்று மோசடி இடம்பெறுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, 6 பெண்களை பொலிசார் கைது செய்துள்ளதாக அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது. வவுனியா, குட்செட் வீதியில் இன்று காலை முதல் 6 இளம் பெண்கள் வீடு வீடாகச் சென்று தாம் மனித உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என பணம் பெற்றுள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறி முதல் செய்துள்ளார்கள்… மேலும்…

அவர்களை கைது செய்து எச்சரித்து பின்னர் விடுதலை செய்துள்ளதாக அதிர்வு இணைய புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Contact Us