உளவு விவகாரம்: போன், நம்பர் இரண்டையும் மாற்றிய அதிபர்… என்ன கொடுமை !

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் செல்போன் எண் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாதுகாப்பு நடவடிக்கையாக தன்னுடைய மொபைல் மற்றும் செல்போன் எண்ணையும் மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us