கோத்தாவிற்கு தமிழர் மீதுள்ள கடுப்பின் உச்சம்; பறிபோனது தமிழரின் அடையாளம்!

வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவியை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக கடந்த 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் முன்பு வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட பொறுப்புக்களை கையளித்த பின்னர் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வவுனியா மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் ஆட்சிமொழியாக தமிழ் காணப்படும் நிலையில் தமிழ்மொழி தெரியாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Contact Us