குத்தி தள்ளிய பிரிட்டன்: நைட் கிளப் போக முடியாது என்று சொல்லி தடுப்பூசி எடுத்த இளைஞர்கள் பட்டாளம் !

பிரித்தானியாவில் கடந்த 6 நாட்களாக, இந்திய உரு மாறிய கொரோனா வைரஸ் பரவல் பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது. 16 வயது தொடக்கம் 22 வயதுக்கு உட்பட்ட சில மில்லியன் இளைஞர்கள் மட்டுமே, தடுப்பூசிகளை எடுக்காமல் தவிர்த்து வந்தார்கள். இன் நிலையில் தடுப்பூசி எடுக்காத நபர்கள், இரவு நேர கழியாட்ட விடுதிகள், சில பப் மற்றும் நைட் கிளப்புக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டத்தை கொண்டு வர ஆலோசிப்பதாக பிரித்தானிய அரசு ஒரு செய்தியை கசிய விட்டது. அவ்வளவு தான்… உடனே நான் … நீ …. என்று போட்டி போட்டுக் கொண்டு சென்று இளைஞர்கள் தடுப்பூசிகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்… இதனால்…

கடந்த 3 மாதங்களாக இளைஞர்களுக்கு மட்டும் தொற்றி வந்த இந்திய உரு மாறிய கொரோனா வைரஸ் தற்போது கடுமையாக வீழ்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. ஒரே நாளில் பல லட்சம் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தடுப்பூசிகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணத்தால் கொரோனா பரவல் வெகுவாக குறைவடைய ஆரம்பித்து விட்டது. நைட் கிளப் , குடி வெடி நிலையம், எவ்வளவு முக்கியமான இடமாக உள்ளது பார்த்தீர்களா ? பிரிட்டன் அரசு சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Contact Us