இஷாலினி என்ற சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை; வெளியான பின்னணி!

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த இஷாலினி என்ற சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இஷாலினியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறெனினும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது பலனளிக்கவில்லை என ஸ்ரீலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

வாக்குமூலம் வழங்கும் நிலையில் சிறுமியின் உடல் நிலை தேறியிருக்கவில்லை என காவல்துறை ஊடகப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹிஷாலினியிடம் வாக்குமூலம் பெற பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அது சாத்தியப்படாமை தொடர்பில் தமது அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Contact Us