வீதி விபத்தில் ஆசிரியை பலி,!! கணவன் படுகாயம்!!

 

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் 25.07.2021 ஞாயிறு இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருமதி. பாமதி ஞானவேல் (49) (T/T/St Lady of Loudes R.C.V Paalaiyoothu) என்பவரே உயிரிழந்துள்ளார். (Dharu Ceramic (Main Street) Owerner Mr.Gnanavel)
மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பாக வாகனம் செலுத்த தெரியாத சாரதிகள் தயவுசெய்து வாகனத்தை தொடாதீர்கள் பல உயிர்கள் பாதுகாக்கப்படும்.

 

Contact Us