பிரபல நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த நான்கு வயது தமிழ் சிறுவன்

 

மெல்பன் டன்டினொங் பிரதேச வீடொன்றில் gas heater மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு வயது தமிழ் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்னிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். வீட்டின் gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது.

இதன்போது ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது. ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்த போதும் மகனைக்காப்பாற்ற முடியவில்லை. இதன்போது அவர்களது அயலவர் ஒருவர் அறையை உடைத்துக்கொண்டு உள்ளே போய் ரித்திஷை வெளியே தூக்கிவந்தபோதும் , ரித்திஷ் இறந்துவிட்டார் என கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்றபோது ரித்திஷின் தகப்பனார் வீட்டிலிருந்து பத்துநிமிட தூரத்தில் வந்துகொண்டிருந்ததாகவும் எனினும், அவர் வருவதற்குள் மகன் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரும் அயலவர்களும் சேர்ந்து முழுதாக பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர்.

அத்துடன் அவசர சேவைகள் பிரிவினர் ரித்திஷின் தயார் மற்றும் சகோதரியை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சேர்த்துள்ளார்கள். Gas heater-இலிருந்து ஏற்பட்ட தீ விபத்து இது என்று தெரிவித்துள்ள பொலீஸார், இதற்கு சந்தேகத்துக்கிடமான வேறு காரணங்கள் எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளனர்

Contact Us