ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய பாதுகாப்பு படை!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலீபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலீபான்களுக்கு எதிரான போரில், பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதற்காக நடந்த மோதலில் தலீபான் குழுக்களை சேர்ந்த 20 போராளிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று வேறு சில மாவட்டங்களையும் படையினர் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய கொடியானது கைப்பற்றப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் பறக்க விடப்பட்டு உள்ளது.

Contact Us