பேஸ்புக்கில் அன்ரியின் திருவிளையாடலில் வலையில் வீழ்ந்த இளைஞன்!! பல லட்சங்களை இழந்தது எப்படி!! அன்ரி கைது!!

 

பேஸ்புக்கில் இளம் யுவதியாக தன்னை அறிமுகப்படுத்தி காதல் வலை விரித்த அன்ரியிடம் சிக்கிய இளைஞர் ஒருவர், 8 இலட்சம் ரூபா பணத்தை இழந்துள்ளார். விடயம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, 3 பிள்ளைகளின் தாயான அன்ரி இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். தம்புள்ளை, அம்புலாம்பே பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே கைதாகியுள்ளார். அழகிய யுவதியொருவரின் படத்தை பயன்படுத்தி முகநூல் கணக்கை ஆரம்பித்து, அம்மணி வீசிய வலையில் திருகோணமலையின் கந்தளாய், அக்போபுர பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞன் ஒருவர் வசமாக சிக்கினார்.

இருவரும் பேஸ்புக்கில் கடலை போட ஆரம்பிக்க, மாத்தளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியராக அந்த பெண் அறிமுகப்படுத்தியுள்ளார். அழகிய, ஆசிரியை காதல் வசப்படுத்திய மகிழ்ச்சியில் இளைஞன் திளைத்துள்ளார். இளைஞனிடம் அடிக்கடி காதலி பணம் கேட்டுள்ளார். அழகிய காதலிக்கு செலவிடாமல் பணத்தை வைத்து என்ன செய்வதென நினைத்த இளைஞன், கேட்கும் போதெல்லாம் தாரளமாக கொடுத்துள்ளார்.

இந்த முகம் தெரியாத பேஸ்புக் காதல் 4 மாதங்கள் நீடித்தது. இதற்குள் காதலிக்காக 8,16500 ரூபாவை இளைஞன் கொடுத்து விட்டார். 18 சந்தர்ப்பங்களில் 6 வங்கி கணக்குகளில் இந்த பணத்தை இளைஞன் வைப்பிலிட்டுள்ளார்.

இந்த இளைஞனிடம் வாங்கிய பணம் போதுமென நினைத்தோ என்னவோ, முகநூல் காதலி தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர்தான் இளைஞனிற்கு உண்மை தெரிந்தது. இதையடுத்து கந்தளாய் பொலிசாரிடம் முறையிட்டார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் தம்புள்ளையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 40 வயது பெண் கைதானார். அவர் பணம் பெற பயன்படுத்திய வங்கிக் கணக்கொன்று, வழிபாட்டு தலமொன்றை நடத்துபவருக்கு சொந்தமானது.

கந்தளாய் நீதிவான் திஷானி தேசபந்துவின் முன் அந்த பெண் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Contact Us