சோமாலியாவில் 15 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி, பதுங்கு குழிகளை அழித்த ராணுவம்!

சோமாலியா நாட்டில் அல் சபாப் இயக்க பயங்கரவாதிகள் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நில கண்ணிவெடிகளை மண்ணில் புதைத்து வைத்தும் தாக்கி வருகின்றனர்.

சமீப காலங்களாக இதுபோன்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை நோக்கி சோமாலிய தேசிய ராணுவம் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹிரான் பகுதியில் மடபான் மாவட்டத்தில் மதூய் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை இலக்காக கொண்டு அந்நாட்டு தேசிய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் அல் சபாப் என்ற இயக்கத்தின் பயங்கரவாதிகள் 15 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. இதனை ராணுவ தளபதி உறுதிப்படுத்தி உள்ளார்.

Contact Us